/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு நிலத்தை விற்க முயற்சி; மக்கள் மறியல்
/
அரசு நிலத்தை விற்க முயற்சி; மக்கள் மறியல்
ADDED : நவ 26, 2025 01:40 AM
சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., 4வது வார்டு கொல்லிமலை செல்லும் வழியில் உள்ளது. அப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் மையம் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை கட்டுவதற்கு அரசு சார்பில் காலி நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது, அந்த இடத்தை சிலர் விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். 4வது வார்டு மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த
அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் இரவு கொல்லிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சேந்தமங்கலம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஏற்பட்டது.

