/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூ வியாபாரியின் காதில் பூ சுற்றிய அரசு பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
/
பூ வியாபாரியின் காதில் பூ சுற்றிய அரசு பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
பூ வியாபாரியின் காதில் பூ சுற்றிய அரசு பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
பூ வியாபாரியின் காதில் பூ சுற்றிய அரசு பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 25, 2024 03:12 AM
நாமக்கல்: நாமக்கல், வண்டிக்கார தெருவை சேர்ந்த குமரவேல் மனைவி நந்தினி, 42; நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பூக்கடை நடத்தி வரு-கிறார். இவரிடம் பஸ் டிரைவர்கள் பலரும் பூ வாங்குவதில் பழக்கம். இந்த வகையில் நாமக்கல், ஏ.எஸ்.பேட்டை, மேல-கோனார் தெருவை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பாலமுருகன், 49, அறிமுகமானார்.
இரண்டு மாதத்திற்கு முன் நந்தினியிடம், 'சேலத்தை சேர்ந்த பாபுஜிக்கு, ஆஸ்திரேலியாவில் உலோகம் விற்ற பணம், 90,000 கோடி ரூபாய் வந்துள்ளது. அதில் மத்திய அரசுக்கு வரி கட்டியது போக மீதி, 30,000 கோடி ரூபாயை, டிரஸ்ட் மூலம் கிராமத்தில் உள்ள மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இதற்கு ஒரு நபர், ஒரு டோக்கனுக்கு, 20,000 ரூபாய் கட்ட வேண்டும். அப்படி கட்டினால், வங்கி கணக்கில், ஒரு கோடி ரூபாய் வரும். அதில், ஐம்பது லட்சம் ரூபாயை, பாபுஜிக்கு கொடுத்துவிட வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும். மீதி, 46 லட்சம் ரூபாயை நீங்கள் எடுத்துக்கொள்-ளலாம்' என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய நந்-தினி, ஐந்து டோக்கன் பெற்றுக் கொள்வதாக கூறி, ஒரு லட்சம் ரூபாயை நான்கு தவணைகளில் கொடுத்துள்ளார். இதேபோல் பலரிடம் பாலமுருகன் பணம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் போலீசில், நந்தினி அளித்த புகார்படி, டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர். இதையடுத்து சேலம் போக்குவரத்து கழக கோட்ட பொது மேலாளர் கோபாலகி-ருஷ்ணன், பாலமுருகனை 'சஸ்பெண்ட்' செய்து உத்தர-விட்டுள்ளார்.