/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:43 AM
ராசிபுரம்,  ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன், காவல்துறையை கண்டித்து  அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில்  துறை நலன், மாணவர்கள் நலன் மற்றும் ஊழியர் நலன் சார்ந்த, 23  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை  முறையீடு செய்தும், இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தாமல் சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்தும்  விதமாக  நடந்து கொள்வதை கண்டித்தும், காலிப்பணியிடங்களை உடனே  நிரப்ப வேண்டும், பணிப்பளுவை  குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
சங்க நிர்வாகிகளை அலட்சிப்படுத்திய, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை நிர்வாகத்தை கண்டித்தும், மாநில பொருளாளரை தாக்கிய காவல்துறையை கண்டித்தும் நேற்று மதியம்  ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராசிபுரம் வட்டக்கிளை பொறுப்பாளர் கோமதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

