/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி 92.43 சதம்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி 92.43 சதம்
ADDED : மே 17, 2025 01:36 AM
நாமக்கல் ;நாமக்கல் மாவட்டத்தில், 155 அரசு பள்ளிகளை சேர்ந்த, 5,116 மாணவர், 5,148 மாணவியர் என, மொத்தம், 10,264 பேர், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இதில், 4,555 மாணவர், 4,902 மாணவியர் என, மொத்தம், 9,457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 92.43 சதவீதம். மேலும், இரண்டு அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளை சேர்ந்த, 47 மாணவர், 37 மாணவியர் என, 84 பேர் தேர்வு எழுதினர்.
அவர்களில், 40 மாணவர், 37 மாணவியர் என, மொத்தம், 77 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 91.67 சதவீதம். அதேபோல், ஐந்து பழங்குடியினர் நல பள்ளிகளை சேர்ந்த, 156 மாணவர், 131 மாணவியர் என, மொத்தம், 287 பேர் தேர்வு எழுதியதில், 280 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, 97.56 சதவீதம். மாவட்டத்தில், 17 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, மொத்தம், 1,583 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 1,461 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 92.04 சதவீதம்.