/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதுமை கண்டுபிடிப்புக்கான போட்டியில் அரசு மகளிர் பள்ளி 'டாப் 10ல்' இடம் பிடித்து சாதனை
/
புதுமை கண்டுபிடிப்புக்கான போட்டியில் அரசு மகளிர் பள்ளி 'டாப் 10ல்' இடம் பிடித்து சாதனை
புதுமை கண்டுபிடிப்புக்கான போட்டியில் அரசு மகளிர் பள்ளி 'டாப் 10ல்' இடம் பிடித்து சாதனை
புதுமை கண்டுபிடிப்புக்கான போட்டியில் அரசு மகளிர் பள்ளி 'டாப் 10ல்' இடம் பிடித்து சாதனை
ADDED : டிச 24, 2024 01:51 AM
நாமக்கல், டிச. 24-
புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 'டாப் 10ல்' இடம் பிடித்து சாதனை
படைத்தனர்.
கல்வி அமைச்சகம், யுவா, யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 'ஏ.டி.எல்., மாரத்தான் 2023-24'க்கான போட்டி நடத்தப்பட்டது. 'ஏ.டி.எல்.,' (அடல் டிங்கரிங் லேப்) மாரத்தான் என்பது, இந்தியா முழுவதும் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு, தேசிய அளவிலான புதுமை கண்டுபிடிப்பு போட்டி. கடந்த முறை நடந்த போட்டியில், நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து, 12,000க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் பெறப்பட்டன. இந்தாண்டு, 'ஏ.டி.எல்.,' மாரத்தான், 'இந்தியாவின், 75வது குடியரசு தினத்தை மையமாக கொண்டது.
இதில் விண்வெளி, விவசாயம், பேரிடர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் பிரச்னை தீர்வு திட்டங்களை மாணவர் குழுக்கள் உருவாக்க முடியும். இப்போட்டியில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மாநில அளவிலான, 'ஏ.டி.எல்., மாரத்தான்' நடத்திய புதுமை படைப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான போட்டியில் பங்கேற்றனர். இதில், பிளஸ் 1 மாணவியர் தஸ்மீனா, அனுஹர்ஷினி, வந்தனா ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில், சிறந்த படைப்பிற்கான முதல், 300 பள்ளிகளை, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் சார்ந்த பயன்கள் கேட்டறிந்தது. அவற்றில், சிறந்து விளங்கக்கூடிய படைப்புகள், 30 ஆக குறைக்கப்பட்டு, மேலும், இதில் சிறந்து விளங்கக்கூடிய படைப்புகளில், முதல், 10 ஆக குறைக்கப்பட்டது. அதில், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மாற்றுத்திறனாளிகளுக்கான தானியங்கு சக்கரவண்டியை புதுப்பித்தலுக்கான படைப்பை
கண்டுபிடித்தனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்பு, முதல், 'டாப் 10ல்' இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த சாதனை மாணவியர், வரும், 2025 ஜன., 7 முதல், 10 வரை, டில்லி ஐ.ஐ.டி., மேற்பார்வையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள, 'டெல்' நிறுவனத்தில் நடக்கும், 'டாப் 10' படைப்புகளுக்கான போட்டியில்
பங்கேற்கின்றனர்.
இப்போட்டியில் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில், 'டாப் 10'ல் இடம் பிடித்த பள்ளி மாணவியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் கண்டுபிடிப்பின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்து வாழ்த்து பெற்றனர். தலைமையாசிரியர் கலைச்செல்வி, பள்ளி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கம்ப்யூட்டர் ஆசிரியர் பிரபாகரன், தமிழாசிரியர் ராகவன் ஆகியோர்
பங்கேற்றனர்.