/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 21, 2024 03:13 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் - மோகனுார் சாலை, அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமச்சந்தின் தலைமை வகித்தார். அதேபோல், நாமக்கல் - திருச்சி சாலையில் செயல்படும், கவிஞர் ராமலிங்க அரசு மகளிர் கல்லுாரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத்தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கை- 2020ஐ திரும்ப பெற வேண்டும். அனைத்து
மாநிலங்களிலும் கல்லுாரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது, 65 என்பதை உறுதி செய்ய வேண்டும். நிபந்தனைகள் இன்றி
பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பன உள்பட, 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.