/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசு 'ஹிட் அண்டு ரன்' திட்டத்தை திரும்ப பெற வேண்டும்: வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மனு
/
மத்திய அரசு 'ஹிட் அண்டு ரன்' திட்டத்தை திரும்ப பெற வேண்டும்: வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மனு
மத்திய அரசு 'ஹிட் அண்டு ரன்' திட்டத்தை திரும்ப பெற வேண்டும்: வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மனு
மத்திய அரசு 'ஹிட் அண்டு ரன்' திட்டத்தை திரும்ப பெற வேண்டும்: வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் மனு
ADDED : ஜன 04, 2024 11:37 AM
நாமக்கல்: 'மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தமான, 'ஹிட் அண்டு ரன்' திட்டத்தை திரும்ப பெற வேண்டும்' என, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்க மாநில தலைவர்
பத்மராஜ் தலைமையில், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
'சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற் சங்கத்தை', தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறோம். வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பு என்பது, எங்களின் முக்கிய குறிக்கோள். எங்கள் சங்கத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான ஓட்டுனர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாகனங்களை தொடர்ந்து இயக்கி வருகின்றனர்.
பெரியதாக கல்வி அறிவு இன்றி, பல மாநிலங்களின் மொழிகள் தெரியாமலும், அனுபவத்தின் அடிப்படையிலும், மத்திய அரசின் மேல் உள்ள நம்பிக்கையிலும், நாங்கள் ஓட்டுனர் தொழிலை சேவையாக செய்து வருகிறோம்.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு, புதியதாக கொண்டு வந்துள்ள (ஹிட் அண்டு ரன்), 'இடித்துவிட்டு ஓடு' என்ற சட்டத்தின் படி, எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளின் போது, முறையாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தராமல், சம்பவ இடத்தை விட்டு ஓடும் ஓட்டுனர்களுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும் அல்லது 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில், சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டம், இந்தியாவில் ஓட்டுனர் தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் பல கோடிக்கணக்கான ஓட்டுனர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கி உள்ளது. காரணம், விபத்து நடந்த இடத்தில், வாகனத்தை சேதப்படுத்துவது. ஓட்டுனர்களை கொடூரமாக தாக்குவது.
கட்டிவைத்து அடிப்பது, அரபு நாடுகள் வழங்கும் தண்டனை போல், சாலையில் செல்பவர்கள் எல்லாம் ஓட்டுனர்களை அடிப்பது, வாகனத்தில் உள்ள சரக்குகளை கொள்ளையடிப்பது போன்ற செயல்கள் சாதாரணமாக நடக்கிறது. இதில் இருந்து ஓட்டுனர்களை பாதுகாக்க எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத நிலையில், ஓட்டுனர் தனது உயிரை காத்துக்கொள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அதனால், இந்த புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் ஓட்டுனர்களாகிய நாங்கள், எங்கள் தொழிலை செய்ய முடியாது. எங்களின் உயிர் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி விடும். இந்த சட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.