/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஹேந்ரா கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
மஹேந்ரா கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மஹேந்ரா கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மஹேந்ரா கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : அக் 01, 2024 07:08 AM
மல்லசமுத்திரம்: நாமக்கல், மல்லசமுத்திரம் மஹேந்ரா கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா, மஹேந்ரா இன்ஜி., கல்லுாரியில் உள்ள காந்தி கலையரங்கில் நடந்தது. மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாரத்குமார் தலைமை வகித்தார். சேலம் பெரியார் பல்கலை தேர்வாணையர் கதிரவன், 2020-23ம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை, பட்டம் படித்த, 643 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''மாணவர்கள் கற்ற கல்வி என்பது, செய்திகளை பெறுவது மட்டுமல்ல; அறிவுத்திறனை கூர்மைப்படுத்துவதே. அதனை நல்வழிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
மஹேந்ரா பொறியியல் கல்லுாரிகளின் செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், கலை அறிவியல் கல்லுாரி இயக்குனர் சம்பத்குமார் ஆகியோர், அனைவரையும் வரவேற்றனர். கல்லுாரி முதல்வர் ஆண்டறிக்கை வாசித்து, பட்டம் பெற்ற மாணவ, மாணவியரை வாழ்த்தினார். கல்லுாரி தேர்வாணையர் கோபாலகிருஷ்ணன், அனைத்து துறைத்தலைவர்கள், கல்லுாரியில் பணியாற்றும் பல்துறை பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.