/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உளுந்து சாகுபடி தொழில் நுட்பம்: 25ல் இலவச பயிற்சி முகாம்
/
உளுந்து சாகுபடி தொழில் நுட்பம்: 25ல் இலவச பயிற்சி முகாம்
உளுந்து சாகுபடி தொழில் நுட்பம்: 25ல் இலவச பயிற்சி முகாம்
உளுந்து சாகுபடி தொழில் நுட்பம்: 25ல் இலவச பயிற்சி முகாம்
ADDED : அக் 23, 2024 07:20 AM
நாமக்கல்: 'வரும், 25ல் உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 25 காலை, 10:00 மணிக்கு, 'உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை' என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது.
பயிற்சியில், உளுந்து வகைகள், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனையின் முக்கியத்துவம், மாதிரிகள் சேகரிக்கும் முறைகள், ஊட்டச்சத்து, களை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கப்படுகிறது. அதில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ள அனைவரும், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286--266345, -266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, வரும், 24ல், மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.