/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கின்னஸ் சாதனை விழிப்புணர்வு மாரத்தான்
/
கின்னஸ் சாதனை விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : அக் 03, 2025 01:57 AM
நாமக்கல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் கின்னஸ் சாதனை மாரத்தான் ஓட்டம் நடந்தது. மகாத்மா காந்தியின் 156வது, பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு அரசு மேல் நிலைப்பள்ளியில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. 300க்கும் மேற்பட்ட ஆண், பெண்
மற்றும் குழந்தைகள் போட்டியில் கலந்துகொண்டனர்.இந்த கின்னஸ் சாதனை மாரத்தான் நிகழ்ச்சியை மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்துடன், மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம் இணைந்து நடத்தியது.
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஓட்டப்போட்டியானது மோகனுார் சாலை லத்துவாடி பிரிவு சாலை வரை சென்று மீண்டும் தெற்குப்பள்ளியில் நிறைவடைந்தது. கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ், மெடல் மற்றும் டீ சர்ட் வழங்கப்பட்டன.