ADDED : அக் 03, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், பரமத்தி அருகே தொட்டிபட்டி சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில் விஜயதசமியான நேற்று குருபூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல் நடப்பாண்டு 107 ம் ஆண்டு சாய் குருபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதையொட்டி விடியற்காலை 5:00 மணி முதல் இரவு 9;15 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை, ஆரத்தி தரிசனமும் தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
அதேபோல் காலை 9:30 முதல் 10;30 மணி வரை ஸ்ரீவித்தியா ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்க பரமத்தி,ப.வேலுார்,நாமக்கல், கரூர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.