/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.4.55 லட்சத்தில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை
/
ரூ.4.55 லட்சத்தில் வணிக வளாகம் கட்ட பூமி பூஜை
ADDED : அக் 03, 2025 01:57 AM
திருச்செங்கோடு. திருச்செங்கோட்டில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பழைய பஸ் ஸ்டாண்ட், அதை சுற்றி உள்ள வணிக வளாக கடைகள் பழுதடைந்தது. புதிய வணிக வளாகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 4 கோடியை, 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 12,000 சதுர அடி பரப்பளவில் கட்ட உள்ள வணிக வளாகத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
திருச்செங்கோடு கொ.ம.தே.க.,-எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி, திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
திருச்செங்கோடு மேற்கு நகர தி.மு.க., செயலாளர் நடேசன், கிழக்கு நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி இன்ஜினியர் சரவணன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.