/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லி விலை கிடுகிடு; கிலோ ரூ.1,400க்கு விற்பனை
/
குண்டுமல்லி விலை கிடுகிடு; கிலோ ரூ.1,400க்கு விற்பனை
குண்டுமல்லி விலை கிடுகிடு; கிலோ ரூ.1,400க்கு விற்பனை
குண்டுமல்லி விலை கிடுகிடு; கிலோ ரூ.1,400க்கு விற்பனை
ADDED : நவ 13, 2024 07:29 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் குண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு பறிக்கும் பூக்களை, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டில் நடக்கும் ஏலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த புரட்டாசி மாதம், மல்லிகை பூக்கள் அதிகளவில் வரத்து இருந்ததாலும், விசேஷ தினங்கள் இல்லாததாலும், குண்டுமல்லி பூ கிலோ, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஐப்பசி மாதம் விசேஷ தினங்கள் அதிகம் உள்ளதால், கடந்த, 15 நாட்களாக குண்டுமல்லி பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த, 7 வரை கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், நேற்று வரத்து குறைவு காரணமாக, கிலோ, 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஊசிமல்லி, 500 ரூபாய், அரளி பூ, 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.