/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லி கிலோ ரூ.1,300க்கு விற்பனை
/
குண்டுமல்லி கிலோ ரூ.1,300க்கு விற்பனை
ADDED : நவ 23, 2025 01:31 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியனில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தினமும் வருமானம் தரக்கூடிய குண்டுமல்லி பூக்கள் பயிரிட்டுள்ளனர்.
பூக்களை பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் தினசரி பூ மார்க்கெட்டிற்கு ஏலத்திற்காக வியாபாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால், செடிகளில் பூக்கள் வரத்து குறைந்து பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இதேபோல், தற்போது முகூர்த்த தினங்கள் வருவதால், கடந்த சில நாட்களாக குண்டுமல்லி பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம், ஒருகிலோ குண்டுமல்லி, 540 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று ஒருகிலோ, 1,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

