ADDED : ஜூன் 20, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், அத்தனுார் அருகே, குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, வெண்ணந்துார் போலீசார் ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையில், கொங்கணசித்தர் கோவில் அருகில் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது ஹான்ஸ், விமல் பாக்கு, ஏ 1 பாக்கு உள்ளிட்ட, 40 கிலோ குட்கா புகையிலை பொருட்களை டூவீலரில் கடத்தி வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அத்தனுார் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ், 32, அத்தனுார், பனங்காடு அடுத்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைநாடார் மகன் சேகர், 42, என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார். அவர்களிடம் இருந்து குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

