/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி; கிடா வெட்டி கொண்டாட்டம்
/
ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி; கிடா வெட்டி கொண்டாட்டம்
ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி; கிடா வெட்டி கொண்டாட்டம்
ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி; கிடா வெட்டி கொண்டாட்டம்
ADDED : டிச 23, 2024 09:14 AM
மல்லசமுத்திரம்: ராமாபுரம், பாப்பான்குட்டை ஏரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால், விவசாயிகள் கிடா வெட்டி பூஜை செய்து கொண்டாடினர்.
மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் அருகேயுள்ள, 80 கவுண்டம்பாளையம் பாப்பான்குட்டை ஏரி, 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஏரி மூலம், 80 கவுண்டம்பாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, போதிய தண்ணீரின்றி பாசன வசதியில்லாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த, 20ம் தேதி இரவு இப்பகுதியில் பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது. இதனால், மகிழ்ச்சியடைந்த மக்கள், விவசாயிகள் நேற்று காலை ஏரியில் பூக்கள் துாவி, பூஜை செய்து கிடா வெட்டி கொண்டாடினர்.