/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இருகரையை தொட்டு செல்வதால் மகிழ்ச்சி

ADDED : ஆக 21, 2025 02:12 AM
மோகனுார், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழையால், கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகரித்து, கே.ஆர்.எஸ்., அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், 50,000 கன அடியில் இருந்து, 78,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து, 35,000 கன அடி வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது, 50,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அவற்றை கருத்தில்கொண்டு, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், ஜேடர்பாளையம், ப.வேலுார் மற்றும் மோகனுார் ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, மோகனுார் காவிரி ஆற்றில், இரு கரைகளையும் தொட்டபடி, தண்ணீர் பாய்ந்தோடுவதால், கடல்போல் காட்சியளிக்கிறது. அவற்றை, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பார்த்து ரசித்து
செல்கின்றனர்.