/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் திருச்சி, துறையூர் பஸ்களால் மகிழ்ச்சி
/
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் திருச்சி, துறையூர் பஸ்களால் மகிழ்ச்சி
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் திருச்சி, துறையூர் பஸ்களால் மகிழ்ச்சி
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் திருச்சி, துறையூர் பஸ்களால் மகிழ்ச்சி
ADDED : அக் 11, 2025 01:20 AM
நாமக்கல், தீபாவளியை முன்னிட்டு, நேற்று தொடங்கி, வரும், 26 வரை, திருச்சி, துறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து, பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து சென்றதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 2024ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, அனைத்து பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள், டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. மேலும், திருச்சி, துறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றது. பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்து வந்ததனர்.
இந்நிலையில், வரும், 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால், நாமக்கல் கடைவீதிக்கு புத்தாடை, நகைகள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் படையெடுப்பர். அதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, திருச்சி, துறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, நேற்று முதல், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருச்சி, துறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து, வெளியேறின. அதனால், பயணிகள் மகிழ்ச்சியடைத்தனர். 'வரும், 26 வரை என்பதை மாற்றி, தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.