/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடைப்பாடி ஜி.ஹெச்.,ல் சுகாதார அமைச்சர் ஆய்வு
/
இடைப்பாடி ஜி.ஹெச்.,ல் சுகாதார அமைச்சர் ஆய்வு
ADDED : நவ 06, 2025 01:20 AM
இடைப்பாடி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு மருத்துவமனை புது கட்டட திறப்பு விழாவுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் இருந்து ரயில் மூலம், நேற்று சங்ககிரி ஆர்.எஸ்., பகுதிக்கு வந்தார்.
அங்கிருந்து சங்ககிரி நகர் வழியே, இடைப்பாடி பிரதான சாலையில், 8 கி.மீ., 'வாக்கிங்' சென்றார். பின் கார் மூலம் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். நோயாளிகளிடம், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். சிலர், 'சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லை. இதனால் சேலம் செல்ல வேண்டியுள்ளது' என தெரிவித்தனர்.
அதற்கு நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார். தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

