/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டா கிடைக்காததால் நுாதன போராட்டம்
/
பட்டா கிடைக்காததால் நுாதன போராட்டம்
ADDED : நவ 06, 2025 01:16 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டி மேற்கு மாதா கோவில் தெரு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு அருகே, நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாதவர்கள், பட்டா கேட்டு கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இதுநாள் வரை பட்டா வழங்கவில்லை.
சில மாதங்களுக்கு முன், ராசிபுரம் எல்.ஐ.சி., பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு, மூலப்பள்ளிபட்டி மேற்கு மாதா கோவில் தெரு பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், எங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி, நாமகிரிப்பேட்டை ஆர்.ஐ., பூர்ணிமாவை முற்றுகையிட்டு ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

