/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொற்றுநோய் பரவலை தடுக்க சுகாதார துறையினர் ஆய்வு
/
தொற்றுநோய் பரவலை தடுக்க சுகாதார துறையினர் ஆய்வு
ADDED : ஆக 05, 2025 01:42 AM
நாமகிரிப்பேட்டை, மழைக்காலத்தில் தான் தொற்று நோய் அதிகளவு பரவுகிறது. முக்கியமாக மழைநீர் தேங்கி நிற்கும் சிரட்டை, டயர், உரல், பிளாஸ்டிக் டப்பா உள்ளிட்டவைகளில் கொசு உற்பத்தியாகிறது. நல்ல நீரில் உருவாகும் கொசு மூலம் தான் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதனால், சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவர். அதன்படி, நேற்று நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல் சுகாதாரத்துறையினர், ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர்.
ஒன்றிய சுகாதார ஆய்வாளர் மணி, மாவட்ட இளநிலைபூச்சியல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் சோதனையிட்டனர். தண்ணீர் தொட்டிகளில் புழுக்கள் உள்ளனவா என, சோதனையிட்டு மருந்து ஊற்றிச்சென்றனர். தொடர்ந்து, மழைக்காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி சென்றனர். இதேபோல், டவுன் பஞ்., ஊராட்சிகளிலும் தொடர்ந்து ஆய்வு பணி நடக்கும் என தெரிவித்தனர்.