/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., திரங்கா யாத்திரை பொறுப்பாளர்கள் அறிவிப்பு
/
பா.ஜ., திரங்கா யாத்திரை பொறுப்பாளர்கள் அறிவிப்பு
ADDED : ஆக 05, 2025 01:42 AM
ராசிபுரம், சுதந்திர தினத்தன்று வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்ற நோக்கோடு, பா.ஜ.,வினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக, திரங்கா யாத்திரை என்ற மூவர்ண கொடி யாத்திரையை நடத்த தனியாக குழு அமைத்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் திரங்கா யாத்திரை குழு பொறுப்பாளர்களை மாவட்ட தலைவர் சரவணன் அறிவித்துள்ளார்.
அதில், வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் துாய்மை பணி ஆகியவை ஆக., 10 முதல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ராம்குமார், மாவட்ட துணை தலைவர் சித்ரா, மாவட்ட செயலாளர் ஜெயா, மாவட்ட முன்னாள் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட முன்னாள் இளைஞர் அணி தலைவர் ராம்விலாஸ் பிரபு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என, தெரிவித்துள்ளார்.