/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமறைவாக உள்ளவர் தேடப்படும் குற்றவாளி
/
தலைமறைவாக உள்ளவர் தேடப்படும் குற்றவாளி
ADDED : ஆக 05, 2025 01:41 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, மொளசி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த, 2010ல் நடந்த திருட்டு வழக்கில், பரமத்திவேலுர் தாலுகா, குன்னத்துார் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் ஜாமினில் வெளியே வந்தார். இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த, 2023 பிப்., 18 முதல், தலைமறைவாக இருந்து வருகிறார். இதையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மொளசி போலீசார், பரமத்திவேலுார், குன்னத்துர் கிராம நிர்வாக அலுவலருடன் சேர்ந்து, பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில், சுப்ரமணி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது