/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திறந்தவெளியில் குவிக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
திறந்தவெளியில் குவிக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு
திறந்தவெளியில் குவிக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு
திறந்தவெளியில் குவிக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 24, 2025 02:02 AM
பள்ளிப்பாளையம்:
காவிரி பகுதியில் சாலையோரம் குவிக்கும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் சாலையோரம் திறந்தவெளியில் இரவில் வாகனத்தில் கொண்டு வந்து குப்பை, கழிவு பொருட்கள், இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பை, கழிவு, இறைச்சி கழிவுகளால் அப்பகுதியே சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பல சமயத்தில் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலையும் ஏற்படுகிறது. சில சமயம், குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுவோர், இரவில் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது.
எனவே, இப்பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும். மீறி கொட்டுவோர் மீது, பள்ளிப்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.