/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் பகுதியில் காற்றுடன் பெய்த கனமழை
/
வெண்ணந்துார் பகுதியில் காற்றுடன் பெய்த கனமழை
ADDED : மே 03, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்:வெண்ணந்துார் பஞ்., யூனியன், அத்தனுார் அலவாய்பட்டி, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, மின்னக்கல், வடுகம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், மதியம், 3:00 மணிக்கு மேற்கண்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சில நாட்களாக கொளுத்தி வந்த வெயில் தாக்கம் குறைந்து, இதமான சீதோஷண நிலை நிலவியது. மேலும், சில நாட்களாக போதிய மழை இல்லாததால், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். தற்போது பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.