/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாழவந்தி, அணியாபுரம் பகுதியில் கனமழை 4 மணி நேரம் மின் துண்டிப்பால் மக்கள் அவதி
/
வாழவந்தி, அணியாபுரம் பகுதியில் கனமழை 4 மணி நேரம் மின் துண்டிப்பால் மக்கள் அவதி
வாழவந்தி, அணியாபுரம் பகுதியில் கனமழை 4 மணி நேரம் மின் துண்டிப்பால் மக்கள் அவதி
வாழவந்தி, அணியாபுரம் பகுதியில் கனமழை 4 மணி நேரம் மின் துண்டிப்பால் மக்கள் அவதி
ADDED : ஏப் 07, 2025 01:57 AM
மோகனுார்: வாழவந்தி, அணியாபுரம் பகுதியில் கனமழை பெய்ததால், நான்கு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால், கிராம மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதி-கரித்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழ-டுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில், ஒரு சில இடங்களில் கனமழையும், பல்வேறு இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், கடந்த, 4ல், பர-வலாக மழை பெய்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்-கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று முன்தினமும், மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், நேற்றும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிக-மாக காணப்பட்டது. அதனால், மழை வரும் என எதிர்பார்க்கப்-பட்டது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, மோகனுார் அடுத்த எஸ்.வாழவந்தி, அணியாபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக, தாழ்-வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி-யது. வாழவந்தி, அணியாபுரம், மணியங்காளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நான்கு மணி நேரத்துக்கும் மேல் மின் தடை நீடித்ததால், கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.