/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடி, மின்னலுடன் கன மழை 50 'டிவி'க்கள் பழுதால் அவதி
/
இடி, மின்னலுடன் கன மழை 50 'டிவி'க்கள் பழுதால் அவதி
இடி, மின்னலுடன் கன மழை 50 'டிவி'க்கள் பழுதால் அவதி
இடி, மின்னலுடன் கன மழை 50 'டிவி'க்கள் பழுதால் அவதி
ADDED : அக் 23, 2024 01:39 AM
இடி, மின்னலுடன் கன மழை
50 'டிவி'க்கள் பழுதால் அவதி
மோகனுார், அக். 23-
இடி, மின்னலுடன் பெய்த கன மழையால், மோகனுார் சுற்று வட்டாரத்தில், பல மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டிவி' உள்பட, 50க்கும் மேற்பட்ட, 'டிவி'க்கள் பழுதடைந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும், லேசான மழையும் பெய்தது. குறிப்பாக, மோகனுாரில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இடி, மின்னல் காரணமாக, மின் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த பீங்கான்கள் வெடித்து சிதறின.
இதனால், பெரும்பாலான பகுதிகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்வாரியத்துறையினர் பழுதடைந்த பீங்கானை மாற்றியதையடுத்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், 50க்கும் மேற்பட்ட வீடுகளில், 'டிவி'க்கள் பழுதடைந்தன. அதில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டிவி'யும் அடங்கும். அதிகாலை, 3:00 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம், மாலை, 4:00 மணிக்கும், ஒரு சில இடங்களில், இரவு, 7:00 மணிக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

