/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுாரில் இடி, மின்னலுடன் கனமழை மாவட்டம் முழுதும் 161.50 மி.மீ., பதிவு
/
மோகனுாரில் இடி, மின்னலுடன் கனமழை மாவட்டம் முழுதும் 161.50 மி.மீ., பதிவு
மோகனுாரில் இடி, மின்னலுடன் கனமழை மாவட்டம் முழுதும் 161.50 மி.மீ., பதிவு
மோகனுாரில் இடி, மின்னலுடன் கனமழை மாவட்டம் முழுதும் 161.50 மி.மீ., பதிவு
ADDED : அக் 22, 2024 01:03 AM
மோகனுாரில் இடி, மின்னலுடன் கனமழை
மாவட்டம் முழுதும் 161.50 மி.மீ., பதிவு
நாமக்கல், அக். 22-
மாவட்டத்தில் நேற்று முன்தினம், 161.50 மி.மீ., மழை பெய்தது. மோகனுாரில், இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், லேசான மழையும் பெய்தது. குறிப்பாக, மோகனுாரில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கொடுத்து ஓடியது. கிராமப்புறங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: எருமப்பட்டி, 10, குமாரபாளையம், 26, மோகனுார், 67, நாமக்கல், 11.50, ப.வேலுார், 24, திருச்செங்கோடு, 19, கொல்லிமலை, 4 என, மொத்தம், 161.50 மி.மீ., மழை பெய்துள்ளது.