/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
மாவட்டத்தில் சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : நவ 30, 2024 01:13 AM
நாமக்கல், நவ. 30-
வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக உருவானது.
இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களுக்கு இன்று, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று நாமக்கல் மாவட்டத்தில் காலை முதல், அவ்வப்போது சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. காலை, 6:00 முதல், மதியம், 12:00 மணி வரை விட்டுவிட்டு பெய்த சாரல் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் அலுவலர்கள், தொழிலாளர்கள் என, பலரும், ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்துக்கொண்டும் சிரமப்பட்டு சென்றனர்.