/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதுச்சத்திரம் பகுதியில் கொட்டிய கனமழை மாவட்டத்தில் ஒரே நாளில் 432.90 மி.மீ., பதிவு
/
புதுச்சத்திரம் பகுதியில் கொட்டிய கனமழை மாவட்டத்தில் ஒரே நாளில் 432.90 மி.மீ., பதிவு
புதுச்சத்திரம் பகுதியில் கொட்டிய கனமழை மாவட்டத்தில் ஒரே நாளில் 432.90 மி.மீ., பதிவு
புதுச்சத்திரம் பகுதியில் கொட்டிய கனமழை மாவட்டத்தில் ஒரே நாளில் 432.90 மி.மீ., பதிவு
ADDED : மே 19, 2025 02:41 AM
நாமக்கல்: மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில், 432.90 மி.மீ., மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து, மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கம்மங்கூழ், இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை அருந்தியும், உண்டும் வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 4ல், 'அக்னி நட்சத்திரம்' என்ற கத்தரி வெயில் துவங்கியது. வரும், 28 வரை நீடிக்கும் கத்தரி வெயில் காலத்தில் மழை பெய்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் பகலில் வெயில் வாட்டி வதைத்தது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்தது. மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, புதுச்சத்திரம் பகுதியில் கோடை மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணி முதல், நேற்று காலை, 6:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,) பின்வருமாறு:
எருமப்பட்டி, 30, குமாரபாளையம், 18, மங்களபுரம், 48.40, மோகனுார், 10, நாமக்கல், 50.50, ப.வேலுார், 14, புதுச்சத்திரம், 91, ராசிபுரம், 63, சேந்தமங்கலம், 37, திருச்செங்கோடு, 12, கலெக்டர் அலுவலகம், 27, கொல்லிமலை, 32 என, மொத்தம், 432.90 மி.மீ., மழை பெய்தது.