ADDED : ஆக 10, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார், மோகனுார் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், எப்போது மழை வரும் என, பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழக்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்ததால், குளிர்ந்து காற்று வீசியது. வெப்பம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, 8:30 மணிக்கு மேல், லேசான மழை, இரவு, 9:30 மணிக்கு மேலும் நீடித்தது. அதேபோல், நாமக்கல் நகரில், இரவு, 7:30 மணிக்கு துாறல் மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.