/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலத்தில் கடும் பனிப்பொழிவு
/
சேந்தமங்கலத்தில் கடும் பனிப்பொழிவு
ADDED : நவ 20, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில், சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. மேலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவாக இருந்ததால், அத்தியாவசிய பணிக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்று பகுதிகளான காந்திபுரம், குப்பநாயக்கனுார், பட்டத்தையன் குட்டை, சாலையூர், பள்ளி புதுார், பச்சுடையாம்பட்டி, அக்கியம்பட்டி, வடுகப்பட்டி, ராமநாதபுரம் புதுார், நைனாமலை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.

