/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? நடித்துக்காட்டி விழிப்புணர்வு

ADDED : செப் 25, 2024 01:33 AM
நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது
எப்படி? நடித்துக்காட்டி விழிப்புணர்வு
பள்ளிப்பாளையம், செப். 25-
ஏரியில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என, வெப்படை தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக நடித்து காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் பகுதியில் உள்ள ஏரியில், ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வெப்படை தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய அலுவலர் செங்குட்வேலு தலைமையில், அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தீயணைப்பு வீரர்கள் நடித்து காட்டினர்.
தண்ணீரில் விழுந்தாலும், தண்ணீரில் மூழ்கினாலும் எப்படி தப்பிப்பது. ஆழமான பகுதிக்கு சென்றவரை எப்படி காப்பாற்றுவது, அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி செய்வது உள்ளிட்டவை குறித்து தத்ரூபமாக நடித்து காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.