/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி
/
மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி
ADDED : டிச 27, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் உதயகுமார், 40; கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 39. தம்பதியருக்கு சுமித்ரா, பவித்ரா என, இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த, 23, இரவு, 7:00 மணிக்கு கணவர் உதயகுமார் குளிப்பதற்காக பிரியா வெந்நீர் வைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது கை தவறி, அங்கு உட்கார்ந்திருந்த உதயகுமார் மீது வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்தார். பின், ஈரோடு தனியார் மருத்துவமனையில், உதயகுமாரை சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

