/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்
/
காவிரி குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்
ADDED : டிச 26, 2025 05:33 AM
எலச்சிபாளையம்: கோக்கலை குடித்தெரு பகுதியில் கடந்த, 10 நாட்களாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை கிராமம், குடித்தெரு பகு-தியில், 60க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 10நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. மக்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி, குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து வரும் மக்-களால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவது சிரமமாக உள்ளதென தெரிவித்தனர். எனவே, காவிரி குடிநீர் தினமும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்ப-குதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

