/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாமக்கல்லில் 4 நாட்கள் சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாமக்கல்லில் 4 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாமக்கல்லில் 4 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாமக்கல்லில் 4 நாட்கள் சிறப்பு முகாம்
ADDED : டிச 26, 2025 05:32 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்-ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கடந்த டிச., 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, மக்-களின் வசதிக்காக திருத்த பணிகள் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்-களிலும் வரும், 27, 28 ஆகிய நாட்களிலும், அடுத்த மாதம் ஜன., 3, 4 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும். இதில் ஜன., 1 அன்று, 18 வயது பூர்த்திய-டையும் புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை பட்டியலில் சேர்க்கலாம். மேலும், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் தொடர்-பான மனுக்களையும் அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள அலுவலர்களிடம் அளிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி கூறுகையில், ''வரைவு வாக்-காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்கள், ஆர்.டி.ஓ., அல்லது தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளித்து பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்,'' என்றார்.

