/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயறு வகை செடிகளில் பூ உதிர்வை தடுக்க யோசனை
/
பயறு வகை செடிகளில் பூ உதிர்வை தடுக்க யோசனை
ADDED : ஜன 13, 2025 02:51 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பகுதியில் பயறு வகை பயிரிட்டுள்ள விவசா-யிகள், பூ உதிர்வதாக புகார் தெரிவித்துள்ளனர். இதை தடுக்க நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
பயறு வகை பயிர்களில் இலைவழி தெளிப்பு மூலம் பூ உதிர்-வதை தடுக்க முடியும். பயறு வகை பயிர்களில் காய்கள் அதிகம் பிடித்து மகசூல் அதிகரிக்க டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும். ஹெக்டேருக்கு, 10 கிலோ டி.ஏ.பி., உரத்தை, 25 லிட்டர் தண்ணீரில், 12 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
பின் தெளிக்கும் சமயம் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து, 475 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூக்கும் நிலையில் ஒரு முறையும், காய்கள் பிடிக்கும் தருணத்தில் மறு முறையும், காலை, மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், 20 சத-வீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.