/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நெற்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சி தட்டைப்பயிறு விதைக்க யோசனை
/
நெற்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சி தட்டைப்பயிறு விதைக்க யோசனை
நெற்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சி தட்டைப்பயிறு விதைக்க யோசனை
நெற்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சி தட்டைப்பயிறு விதைக்க யோசனை
ADDED : செப் 23, 2025 01:38 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன் பகுதிகளில், நெல் வயல்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் உள்ளன. இந்த பூச்சிகள் நெல் பயிரில் உள்ள பச்சையத்தை உறிஞ்சி விடுவதால், சில நாட்களில் நெல் பயிர் வாடி விடுகிறது. இதை தடுப்பது குறித்து,
நாமகிரிப்பேட்டை வேளாண்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் காணப்படுகிறது. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும். நெல் வயலின் வரப்பு ஓரத்தில் தட்டைப்பயறு விதைக்கலாம். தட்டைப்பயிரில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இந்த அசுவினிகளால் பொறிவண்டுகள் கவரப்பட்டு அப்பகுதிக்கு வரும். இவைகள், நெற்பயிரில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும். எனவே, நெல் வயல் வரப்புகளில் தட்டைப்பயறு விதைப்பது அவசியம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.