/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாத தனியார் பஸ் சிறைபிடிப்பு
/
பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாத தனியார் பஸ் சிறைபிடிப்பு
ADDED : நவ 10, 2024 03:20 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 55; இவர், நேற்று மாலை, 5:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து, எஸ்.பி.பி., காலனிக்கு செல்ல, திருச்செங்-கோடு செல்லும் தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். பின், கண்டக்ட-ரிடம், எஸ்.பி.பி., காலனி பஸ் ஸ்டாப்பிற்கு டிக்கெட் கேட்-டுள்ளார்.
அதற்கு அவர், 'எஸ்.பி.பி., காலனியில் பஸ் நிற்காது; கே.எஸ்.ஆர்., பஸ் ஸ்டாப்பில் தான் பஸ் நிற்கும்' என தெரி-வித்து, டிக்கெட் கொடுத்துள்ளார். இதுகுறித்து செந்தில்குமார், தன் நண்பர்களுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, 100க்கும் மேற்பட்டோர், எஸ்.பி.பி., காலனி பஸ் ஸ்டாப்பில் திரண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை மறித்து சிறை பிடித்தனர். பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின், போலீசார், பஸ் டிரைவர், கண்டக்டரிடம், 'இனிமேல், எஸ்.பி.பி., காலனி பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்தி, பயணி-களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்' என, தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.