/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
10 நிமிடத்தில் ஏ.டி.எம்., உடைத்து கைவரிசை 'மேவாட்' கொள்ளையர்கள் குறித்து 'திடுக்'
/
10 நிமிடத்தில் ஏ.டி.எம்., உடைத்து கைவரிசை 'மேவாட்' கொள்ளையர்கள் குறித்து 'திடுக்'
10 நிமிடத்தில் ஏ.டி.எம்., உடைத்து கைவரிசை 'மேவாட்' கொள்ளையர்கள் குறித்து 'திடுக்'
10 நிமிடத்தில் ஏ.டி.எம்., உடைத்து கைவரிசை 'மேவாட்' கொள்ளையர்கள் குறித்து 'திடுக்'
ADDED : செப் 29, 2024 03:10 AM
நாமக்கல்: பத்து நிமிடத்தில், ஏ.டி.எம்.,ஐ உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும், 'மேவாட்' கொள்ளையர்கள் குறித்து திடுக்கிடும் தக-வல்கள் வெளியாகி உள்ளன.
கொள்ளையர்களிடம், தமிழகம், கேரளா, ஆந்திரா மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு-கின்றனர்.கேரள மாநிலம் திருச்சூரில், கடந்த, 27ல், மூன்று ஏ.டி.எம்.,களில் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு, கன்-டெய்னர் லாரியில், கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். அவர்-களை, நாமக்கல் மாவட்டம், வெப்படை அடுத்த செட்டியார்-கடை என்ற காட்டுப்பகுதியில் வைத்து, நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவ-மணி, எஸ்.ஐ., ரஞ்சித் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடித்-தனர்.
'கூகுள் மேப்'
இந்த துப்பாக்கி சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தின், 37, சம்பவ இடத்திலேயே பலியானார். குண்டு காயத்துடன், ஹஸ்ரு (எ) அசர் அலியை, 28, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, கன்டெய்னர் லாரியை சோதனையிட்டபோது உள்ளே, 'ஹூண்டாய் கிரெட்டா' என்ற வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றும், ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடிக்கப்பட்ட, 66 லட்சம் ரூபாயையும் கைப்பற்றினர். மேலும், கன்டெய்னர் லாரியில் பதுங்கி இருந்த இர்பான், 32, சவுக்கீன் கான், 23, முக-மது இக்ரம், 42, சபீர், 26, முபாரக், 18, ஆகிய, ஐந்து பேரை கைது செய்தனர்.
விசாரணையில், ஹரியானா மாநிலம், மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில், போலீ-சாரால் கைது செய்யப்பட்டவர்களிடம், தமிழகம், கேரளா, ஆந்-திரா மாநில போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசார-ணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியவர்களில் ஒருவர் பலி-யானார். மற்றொருவர், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். உயிருடன் பிடிபட்ட இர்பான், சபீர், சவுக்கீன் கான், முகமது இக்ரம், முபாரக் ஆகியோரிடம் வெப்படை போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர விசா-ரணை நடத்தப்பட்டது. சேலம் டி.ஐ.ஜி., உமா, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
விமானம்
அதில், கேரளா ஏ.டி.எம்., கொள்ளையை முடித்துவிட்டு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.,மில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கா-கவே, 'கூகுள் மேப்' உதவியுடன், திருச்சூரில் இருந்து குமாரபா-ளையம் வந்துள்ளனர். சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னரே போலீசில் சிக்கிக் கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில், சபீர், சவுக்கீன் கான் ஆகிய இரு-வரும் டில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்-ளனர். சென்னை துறை முகத்தில் இருந்து கன்டெய்னர் லாரியை எடுத்துக்கொண்டு, கேரளா மாநிலம் திருச்சூர் சென்றுள்ளனர். இவர்கள், 2 பேரும், திருச்சூர் வரும் முன், முகமது இக்ரம் ஒரு வாரத்திற்கு முன்னரே திருச்சூர் சென்று எந்தெந்த, ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடிக்கலாம் என நோட்டமிட்டு வந்-துள்ளார்.
கிருஷ்ணகிரியில் கைவரிசை
காரில் சென்று கொள்ளை அடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியுடன் செல்லும்போது தான் சிக்கினர். 2021ல் மஹாராஷ்டிராவில் ஒரு ஏ.டி.எம்.,மில் கொள்ளையடித்த இதே கும்பல் சிக்கி உள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடித்ததும் இவர்கள் தான். திருச்சூ-ருக்கு முன், கடந்த வாரம், ஆந்திர மாநிலம், கடப்பாவில் கொள்ளை அடித்துள்ளனர்.
ஏ.டி.எம்., கொள்ளை கும்பல் பிடிபட்டதையடுத்து, ஆந்திர போலீசாரும் வெப்படை வந்து விசாரணை நடத்தினர். தற்போது வரை, மூன்று மாநிலத்தில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களுக்கு மேலும் சில மாநிலங்களில் நடந்த, ஏ.டி.எம்., கொள்ளையில் தொடர்பு இருப்பதாக சந்-தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் விரைவில் விசாரணை நடத்-தப்படும்.
ஏ.டி.எம்.,களை குறி வைத்து கொள்ளையை வெற்றிகரமாக முடிப்பது, 'மேவாட்' கொள்ளையர்களின் ஸ்டைல். இந்த கும்-பலில் மொத்தம், 60 முதல், 70 பேர் வரை உள்ளனர். ஒரு பெரிய நெட்வொர்க்காக இருந்து கொள்ளை அடிப்பது இவர்க-ளது ஸ்டைல். ஒரு ஏ.டி.எம்.,மில் நுழைந்தால், 10 நிமிடத்தில் கொள்ளை அடித்து சென்று விடுவர். இவர்களுடன் யார், யார் தொடர்பில் உள்ளனர்? அனைவரின் வங்கி கணக்குகள், பணப்ப-ரிமாற்றம், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தக-வல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு போலீசார் கூறினர்.
போலீசார் விசாரணைக்கு பின், நேற்று குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொள்ளையர்களை அழைத்து சென்று, மருத்-துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப-டுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
7 பிரிவுகளில் வழக்கு
கொள்ளையர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.,) சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, திறந்த வெளியில் தாக்குதல், கொலை முயற்சி, ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்துதல், குற்றச்சதி செய்தல் உள்-பட, ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடலில் இரு குண்டுகள்
இதற்கிடையே உயிரிழந்த ஜூமாந்தின் உடல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இறந்தபோன ஜூமாந்தின் சகோதரர் மற்றும் உறவினர்கள் என,
4 பேர், ஹரியானாவில் இருந்து நேற்று நாமக்கல் அரசு மருத்துவ-மனைக்கு வந்தனர். ஜூமாந்தின் உடலை பார்த்து கதறி அழு-தனர்.
தொடர்ந்து, குமாரபாளையம் மாஜிஸ்திரேட்டு மாலதி, நாமக்கல் தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் பிரேத பரிசோ-தனை செய்யப்பட்டது. போலீசார் வீடியோ மூலம் பதிவு செய்-தனர். இதில், ஜூமாந்தின் உடலில், 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.