/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு
/
78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு
78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு
78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு
ADDED : பிப் 02, 2025 01:43 AM
ராசிபுரம்:ராசிபுரத்தில், 78 வழக்குகளில் தொடர்புடையவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தபோது, தப்ப முயன்றதில் தவறி விழுந்து, இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி, 45; அரசு ஊழியர். கடந்த மாதம், 20ல் இவரது வீட்டில், 19 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்தனர்.
நேற்று அதிகாலை, ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, டூ-வீலரில் அவ்வழியாக வந்த, மூவரை போலீசார் நிறுத்தினர். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் தப்பிச்செல்ல முயன்றபோது, வேகத்தடையில் தடுமாறி விழுந்ததில், ஒருவருக்கு கால், மற்றொருவருக்கு கை, காலில் எலும்பு முறிந்தது. மற்றொரு வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
காயமடைந்த இருவரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 47, சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 23, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணி, 22, என, தெரிந்தது. இதில், மணிகண்டன் மீது மதுரை, சேலம், சென்னை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் 78 வழக்குகள் உள்ளன.