/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,ல் தலைவர், துணைத்தலைவர் மோதல் நீடிப்பால் சிக்கல்
/
ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,ல் தலைவர், துணைத்தலைவர் மோதல் நீடிப்பால் சிக்கல்
ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,ல் தலைவர், துணைத்தலைவர் மோதல் நீடிப்பால் சிக்கல்
ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,ல் தலைவர், துணைத்தலைவர் மோதல் நீடிப்பால் சிக்கல்
ADDED : ஜன 18, 2024 01:13 PM
பள்ளிப்பாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில், தலைவர், துணைத்தலைவர் இடையே நீடிக்கும் மோதலால், டவுன் பஞ்., பகுதியில் வளர்ச்சி திட்டம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., தலைவராக சகுந்தலா, துணைத்தலைவராக சண்முகபிரியா உள்ளனர். இருவரும், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். ஆரம்பம் முதலே, தலைவர், துணைத்தலைவர் ஒரே அணியாக ஒற்றுமையாக செயல்பட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக, இருவருக்கும் இடையே மறைமுகமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
கடந்த மாதம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., துணைத்தலைவர் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் சேர்ந்து, கவுன்சிலர் உரிமை மீட்பு கூட்டமைப்பு என்ற பெயரில், டவுன் பஞ்., அலுவலகம் முன் பேனர் வைத்தனர். இதையடுத்து மறைமுகமாக இருந்து வந்த கோஷ்டி பூசல், வெளியே தெரிய வந்தது. இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது, தி.மு.க., கவுன்சிலர்கள் தலைவர் தலைமையில் ஒரு அணியாகவும், துணைத்தலைவர் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படும் என்பதால், இரண்டு மாதங்களாக கூட்டம் நடத்தவில்லை.
வார்டுகளில் தீர்க்கப்பட வேண்டிய பணிகள், பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வளர்ச்சி திட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைவர் சகுந்தலா கூறுகையில், ''மக்கள் பணி பாதிக்கும் வகையில், சிலர் பிரச்னை செய்கின்றனர். இந்த மாத இறுதியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கும்,'' என்றார்.