ADDED : செப் 28, 2024 01:24 AM
கிருஷ்ணகிரி கொள்ளையில் தொடர்பு
நாமக்கல் மாவட்டத்தில் பிடிபட்ட கொள்ளையர்கள், கிருஷ்ணகிரி ஏ.டி.எம்., கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்பது, போலீசார் விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளியில் கடந்த 21ல், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 23 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல, கடந்த ஏப்., 6ல், கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில் 10 லட்சம் ரூபாய், கடந்த ஜூலை 6ல், ஓசூர் - பாகலுார் சாலையில் உள்ள ஐ.டி.பி.ஐ., - ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 14.5 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டன.
மேலும், கடந்த ஜூலை 5ல், ஆவலப்பள்ளி ஹட்கோ அருகில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றபோது காவலாளி வந்ததால், கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் தான் நேற்று கைதாகியுள்ளனர். கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்; ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.