ADDED : ஜன 13, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், வரும், 15ல் கிளை நுாலகம் புதுப்பித்தல், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலைகள் திறப்பு விழா நடக்கிறது.
தமிழக அரசு, பொது நுாலகத்துறை மாவட்ட நுாலக ஆணைக்-குழு - நாமக்கல் மற்றும் மல்ல சமுத்திரம் கிளை நுாலகம் சார்பில், வரும், 15ல் மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் கிளை நுாலகம் புதுப்பித்தல் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் மற்றும் தேசத்தந்தை மகாத்மா காந்திய-டிகள் திருவுருவ சிலைகள் டவுன் பஞ்., மன்ற தலைவர் திரு-மலை தலைமையில் திறப்பு விழா நடக்க உள்ளது.அமைச்சர் மதிவேந்தன், நகரமண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.