/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்
/
நாமக்கல்லில் கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : மே 03, 2024 07:21 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட, ஜவகர் சிறுவர் மன்றம் கலை பண்பாட்டுத் துறை சார்பில், கோடைகால கலை பயிற்சி முகாம் நாமக்கல்லில் நேற்று துவங்கியது.நாமக்கல், கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கிய பயிற்சி முகாம் தொடர்ந்து, 10 வரை நடக்கிறது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்ற போட்டியை, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் துவக்கி வைத்தார். யோகா, கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், தப்பாட்டம், கரகம், காவடி உள்ளிட்ட கிராமிய நடனம், கைவினை பொருட்கள் தயாரிப்பு கலைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பரதநாட்டியம் தேவியானி, கிராமிய நடனம் பாண்டியராஜன், ஓவியம் கைவினையை வெங்கடேசன், சிலம்பம், யோகா, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை ராமச்சந்திரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.