/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு மையம் திறப்பு விழா
/
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு மையம் திறப்பு விழா
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு மையம் திறப்பு விழா
ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு மையம் திறப்பு விழா
ADDED : ஜூலை 22, 2025 01:58 AM
குமாரபாளையம், குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியின் விளையாட்டு மையம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உலகம் திறப்பு விழா நடந்தது. தாளாளர் அன்பழகன் தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை, சாரணர் மற்றும் வழிகாட்டி இயக்கம் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், பள்ளி முதல்வர் ராஜஸ்ரீ உள்பட பலர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோகிலா, விளையாட்டு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசுகையில், ''நாமக்கல் மாவட்டம் என்றாலே, கல்விக்குத் தான் முதலிடம்; ஆனால், ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில், கல்வி மட்டுமின்றி, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்கள், மாநில அளவிலான விளையாட்டிலும் பங்கேற்று, முதல்வர் கோப்பையை கைப்பற்றுவதுடன் அரசு வழங்கும் வேலைவாய்ப்பை பெற்று, வாழ்வில் உயர வாழ்த்துக்கள்,'' என்றார்.