/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்
/
மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்
மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்
மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்
ADDED : நவ 05, 2025 01:19 AM
சேந்தமங்கலம், புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தையில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய் கிழமை மதியம் வரை நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை வாங்க, விற்க, விவசாயிகள், வியாபாரிகள் புதன் சந்தை பகுதியில் கூடுவர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கும்.
ஆந்திர, கர்நாடகா, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து பால் மாடுகள் மற்றும் இறைச்சி மாடுகள் அதிகளவில் வரத்தாகின. இதில் இறைச்சி மாடு, 30,000 ரூபாய்; கறவை மாடு, 47,000 ரூபாய், கன்றுக்குட்டிகள், 21,000 ரூபாய் என, மொத்தம், 2.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.