/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆவத்திபாளையம் பகுதியில் நாய் தொல்லை அதிகரிப்பு
/
ஆவத்திபாளையம் பகுதியில் நாய் தொல்லை அதிகரிப்பு
ADDED : மே 28, 2025 01:06 AM
பள்ளிப்பாளையம், ஆவத்திபாளையம் பகுதியில், நாய் தொல்லை அதிகரித்துள்ளதால், கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் யூனியன், களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆவத்திபாளையம், சுபாஷ் நகர் பகுதியில் நாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த, 23ம் தேதி சுபாஷ் நகரில் நாய் கடித்து திவ்யதர்ஷினி, 14, என்ற சிறுமிக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை வெளியே அனுப்ப மக்கள் அச்சமடைகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், பஞ்சாயத்து நிர்வாகம், பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.