/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை அதிகரிப்பு
/
தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை அதிகரிப்பு
ADDED : அக் 18, 2024 07:03 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை அதிகரிப்பால் போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் ஏராளமான மளிகை கடையில் குட்கா, புகையிலை, பான் மசாலா விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 13ம் தேதி, பள்ளிப்பாளையம் போலீசார், பாப்பம்பாளையம், அப்பநாய்க்கன்பாளையம், விளாங்காட்டூர். புதுப்பாளையம் காட்டூர் பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது 4 கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை விற்பதை கண்டு பிடித்த போலீசார், சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து தாஜ்நகரில் உள்ள ஒரு மளிகை கடை, அண்ணாநகரில் உள்ள ஒரு மளிகை கடையிலும் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்து, தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கடந்த ஒரு மாதமாக பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.