/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
/
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
ADDED : ஆக 16, 2024 05:31 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் உமா, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கலெக்டர் உமா, போலீஸ் எஸ்.பி.,ராஜேஷ்கண்ணன் ஆகியோர் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டனர். சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையில், அவர்களின் வாரிசுகளுக்கு, மாவட்ட கலெக்டர் கதர் ஆடை அணிவித்து பரிசு வழங்கினார்.விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு, 96,011 ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இருவருக்கு தையல் மிஷின்கள் என மொத்தம், 26 பயனாளிகளுக்கு, 27.21 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார். மாவட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய, 34 போலீஸ் அலுவலர்கள், 224 அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம், 258 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.கலை பண்பாட்டு துறை சார்பில், 30 கலைஞர்களுக்கு கலைமுதுமணி, கலைநண்மணி, கலை சுடர்மணி, கலை வளர்மணி ஆகிய விருதுகளும் மற்றும் ரூ.3.26 லட்சம் மதிப்பில் பரிசு தொகையும் வழங்கினார். அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில் டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட வன அலுவலர் கலாநிதி, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி மற்றும் பலர் பங்கேற்றனர்.* நாமகிரிப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.* குமாரபாளையம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் ரேணுகா, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.* ராசிபுரம் நகராட்சியில் சேர்மன் கவிதா தேசிய கொடியை ஏற்றினார்.* பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மன் தனலட்சுமி, பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அலுவலகத்தில் தலைவர் சகுந்தலா, படவீடு டவுன் பஞ்., தலைவர் ராதாமணி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர். கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

